Tuesday, February 24, 2015

ஷமிதாப் பிறவியிலேயே பேச முடியாத கிராமத்து இளைஞன் டேனிசுக்கு (தனுஷ்) சினிமாவில் பெரிய ஹீரோவாக வேண்டும் என்பது லட்சியம். சினிமாவில் போராடி தோற்று முடங்கிக் கிடக்கிறார் அமிதாப். இந்த இருவரையும் ஒரு புள்ளியில் சந்திக்க வைக்கிறார் சினிமா துணை இயக்குனர் அக்ஷரா ஹாசன். சினிமா வாய்ப்பு தேடும் தனுஷிடம் இருக்கும் அபார திறமையை கண்டுபிடிக்கும் அவர், அவருக்கான குரலைத் தேடுகிறார். அப்போதுதான் கணீர் குரல் அமிதாப்பை கண்டு பிடிக்கிறார். அமிதாப் பேசினால் அது தனுஷின் தொண்டை வழியாக ஒலிக்கும் நவீன தொழில்நுட்பம் கை கொடுக்கிறது. மூவரும் நடத்தும் ரகசிய டிராமாவில் தனுஷ் ஒரே படத்தில் சூப்பர் ஸ்டார் ஆகிறார். பணமும் புகழும் கொட்டுகிறது. அப்போது தனுஷ், அமிதாப் இடையே ஈகோவும் தலை தூக்குகிறது. இருவரும் தனித்தனியே வெற்றிக்கு உரிமை கொண்டாட கூட்டணி உடைகிறது. இருவரையும் இணைக்க அக்ஷரா போராடுகிறார். அந்த போராட்டம் வெற்றி பெறுகிறதா என்பது மீதிக் கதை. குரல் வராமலும் தவிப்பதிலும், இரவல் குரலில் அதிர வைப்பதிலும் தன்னைத் தானே நொந்து கொள்வதிலுமாக தனுஷ் ஒவ்வொரு தமிழனையும் வடக்கு நோக்கி காலரை தூக்கி விட்டுக் கொள்ள வைக்கிறார். அமிதாப் என்ற சிங்கத்தின் குகைக்குள் புகுந்து குட்டிக்கரணம் அடித்து திரும்புகிறது இந்த மான்குட்டி. நம்ம ஊர் சிவாஜி தமிழ் மாதிரி அமிதாப்பின் இந்திதான் படத்தின் ஜீவநாடி. ஒரு மொழியை எல்லோரும் பேசலாம். ஆனால் அந்த மொழியை பேச வைக்கிற கலைஞன் அமிதாப். படத்தின் கதை ஈகோவா இருந்தாலும் ஒரு தென்னிந்திய கலைஞனோடு கைகோர்த்து அவர் நடத்தும் பாடத்தை இங்குள்ள ஹீரோக்களும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறார். கண்ணில் தாயையும், முகத்தில் தந்தையையும் வைத்துக் கொண்டு அக்ஷரா பின்னியெடுக்கிறார். அமிதாப், தனுஷ் இருவருக்கும் மத்தியில் நின்று இருவருக்குமே தண்ணி காட்டியிருக்கிறார். ஈகோ தலைக்கேறி ஆடும் அமிதாப்பிடம் விஸ்கி தத்துவம் சொல்லி ஈகோவை உடைக்கிற ஒரு காட்சி போதும். எத்தனை வருடமாயிற்று இப்படி ஒரு இளையராஜாவைப் பார்த்து. அவரின் பின்னணி இசைதான் சப் டைட்டில் புரியாதவனுக்கும் கதை சொல்கிறது. வாசிக்க வேண்டிய இடத்தில் வாசித்து, மவுனிக்க வேண்டிய இடத்தில் மவுனித்து ஷமிதாப்பை உயர்த்திப் பிடிக்கிறார். பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு ஷமிதாப் ஒரு சினிமா என்பதையே மறக்கடிக்க வைத்து கதைக்குள் இழுத்துச் சொல்கிறது. ஷமிதாப்பில் குறையே இல்லியாப்பு... என்று கேட்பது புரிகிறது. நிறைய இருக்கு. வாய்பேச முடியாத ஒரு கிராமத்தான் மளமளவென சினிமா ஹீரோவது அக்மார்க் சினிமாத்தனம்தான். கோடிகள் புரளும்போதும் அமிதாப் கல்லறை தோட்டத்திலேயே காலம் கழிப்பது லாஜிக் இல்லாத விஷயம்தான். அதற்காக ஷமிதாப்பை எந்த விதத்திலும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. ஷமிதாப் வடகலைக்கும், தென்கலைக்கும் பாலம் அமைத்தவன் என்பதை மறுக்கவும் முடியாது
அனேகன் விமர்சனம் 1960ல் பர்மாவில் ராணுவ கலவரம் ஏற்பட்டு, தமிழர்கள் அகதிகளாகத் திரும்பிய காலக்கட்டத்தில், சாதாரண கூலித்தொழிலாளி தனுசுக்கும், ராணுவ மேஜரின் மகள் அமைராவுக்கும் காதல் மலர்கிறது. கலவரமும், அமைரா தந்தையின் அதிகாரமும் அவர்களை ஜலசமாதியாக்குகிறது. 1980ல் வியாசர்பாடியில் தனுஷ் வடசென்னை அழுக்கு இளைஞனாக வும், அமைரா அக்ரஹாரத்துப் பெண்ணாகவும் பிறக்கிறார்கள். அமைரா மீது ஆசைப்படும் ஒரு பெரிய இடத்து மனிதனால், அவர்களுடைய காதல் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியாகிறது. பிறகு உலகத்துக்கே தெரியாமல் சமாதியாக்கப்படுகிறார்கள். பிறகு இந்தக்காலத்தில் தனுசும், அமைராவும், ஐ.டி கம்பெனி ஒன்றில் வேலை செய்பவர்களாகப் பிறக்கிறார்கள். சந்திக்கிறார்கள், காதல்வசப்படுகிறார்கள். தனுஷ் தன் பூர்வஜென்ம காதலன் என்று, கனவுகளின் மூலம் அமைராவுக்கு தெரிய வருகிறது. முன்ஜென்மங்களில் காதலுக்கு வில்லன்களாக இருந்தவர்கள், இந்த ஜென்மத்திலும் வாழ்கிறார்கள். பிறகு அவர்களால் இந்த ஜென்ம காதலுக்கு வரும் ஆபத்தும், அதை காதலர்கள் எப்படி கடக்கிறார்கள் என்பதும் பரபரப்பான கிளைமாக்ஸ்.முன்ஜென்ம காதல், பர்மா கலவரம், வடசென்னை தாதா கலாசாரம், ஐ.டி நிறுவன மர்மங்கள் என வெவ்வேறு கதைக்களங்களில் ஒரே காதல் கதையை மிக நேர்த்தியாகச் சொல்லி, அதில் பல திடீர் திருப்பங்கள் வைத்து பரபரப்பாக்குகிறார், இயக்குனர் கே.வி.ஆனந்த். மன்னர் காலத்து இளமாறன், பரட்டைத்தலை பர்மா முருகன், வியாசர்பாடி காளி, ஐ.டி இளைஞன் அஸ்வின் என, பேச்சு மற்றும் நடிப்பில் வெரைட்டி காட்டுகிறார் தனுஷ்.மன்னர் காலத்து செண்பகவல்லி, பர்மா சமுத்ரா, வியாசர்பாடி கல்யாணி, ஐ.டி மதுமிதா என, நன்கு நடித்துள்ளார் அமைரா தஸ்தூர். கார்த்திக்கின் ரீ&என்ட்ரி செம மாஸ். ஐ.டி நிறுவன அதிபராக, அதிரடியாக வந்து கைத்தட்டல் அள்ளுகிறார். ஹாரிஸ் ஜெயராஜின் பின்னணி இசை பிரமாதம். ‘டங்கா மாரி’ பாடல் ஆட வைக்கிறது. ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு, கிளாஸ். ஜென்மங்கள் பற்றிய கதையில் லாஜிக் பார்க்க வேண்டியதில்லை என்றாலும், நிகழ்காலத்தில் வாழும் அமைராவுக்கு பூர்வஜென்மத்து ஆட்களை அடையாளம் கண்டுகொள்ள முடியும்போது, மெயின் வில்லன் அருகில் இருந்தும், இவன்தான் போன ஜென்மத்தில் தங்களைக் கொன்றவன் என்று அடையாளம் காண முடியாமல் போவது ஏன்? வியாசர்பாடி எபிசோடில், 1980களுக்கே உரிய பீரியட் விஷயங்கள் மிஸ்சிங்.

Thursday, January 30, 2014

டைரக்ஷனுக்கு சந்தோஷ் சிவன் முழுக்கு சந்தோஷ் சிவன் படம் இயக்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளார். ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் கடந்த 20 வருடமாக பல்வேறு படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். கடந்த ஆண்டு துப்பாக்கி படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். தற்போது சூர்யா படத்துக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். பல்வேறு ஆவணப்படங்களை இயக்கியதுடன் அதற்காக தேசிய விருது வென்றிருக்கிறார். டெரரிஸ்ட், மல்லி, அசோகா உள்ளிட்ட பல படங்களும் இயக்கி உள்ளார். தற்போது தமிழ், ஆங்கிலத்தில் சிலோன் என்ற படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் இவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது. சந்தோஷ் சிவன் கூறும்போது,பத்மஸ்ரீ விருது பெற்றது மகிழ்ச்சி, அதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ் படங்களில் பணியாற்றும்போது அவர்கள் காட்டும் அன்பு என்னை கவர்ந்தது. அடுத்து புதிய படம் இயக்க உள்ளேன். அதற்கான நட்சத்திர தேர்வு இன்னும் செய்யப்படவில்லை. பெரிய நிறுவனங்களிலிருந்து படம் இயக்க வாய்ப்பு வருகிறது. ஆனால் அடுத்து இயக்கும் படத்தை முடித்தவுடன் டைரக்ஷன் செய்வதை நிறுத்த முடிவு செய்துள்ளேன் என்றார். - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=12365&id1=3#sthash.XyD19XRL.dpuf